வத்திகானில் எதிர்வரும் 27 ஆம் திகதி பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, புனித பாப்பரசரரை சந்திக்க உள்ளதாக தெரியவருகிறது.
ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் சம்பந்தமாக புனித பாப்பரசருக்கு தெளிவுப்படுத்துவதற்காக இத்தாலி மாத்திரமல்லாது ஐரோப்பாவில் வசிக்கும் இலங்கை மக்களை எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிறுக் கிழமை வத்திகானுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை வத்திகான் புனித பீட்டர்ஸ் தேவாலய வளாகத்திற்கு காலை 10 மணிக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் பாப்பரசர் இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிடலாம் என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு நீதியை தேடும் மக்களாக ஐரோப்பாவில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த நிகழ்வில் ஒன்றிணையுமாறு ஒருங்கிணைப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.