ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் அரசாங்கத்தின் இரண்டு அமைச்சர்களை அந்த பதவிகளில் இருந்து உடனடியாக நீக்குமாறு சில அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய இரண்டு பிரதான அமைச்சு பொறுப்புகளை வகிக்கும் இவர்கள் தமது அமைச்சுக்களில் பெரியளவில் நிதி மோசடிகளை செய்துள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.
இந்த அமைச்சர்களின் செயற்பாடுகள் அரசாங்கத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் எனவும் அரசாங்கத்தையும் மக்களையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் இவர்கள் மேற்கொண்டு நடவடிக்கைகளை நிறுத்த அவர்களை பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில மாதங்களில் அமைச்சரவையில் முழுமையான மாற்றங்கள் எற்படுத்தப்பட உள்ளன.
அதற்கு முன்னர் மேற்படி இரு அமைச்சர்களின் அமைச்சு பதவிகளை மாற்ற வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.