மன்னார் எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கடலாமைகள் மன்னார் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் படி மன்னாரில் தேடுதலை மேற்கொண்டனர்.
இதன் போது குறித்த வீட்டின் குளியல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அரிய வகை 5 கடல் ஆமைகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டது.
குறித்த ஆமைகள் அரிய வகை பேராமை இனத்தை சேர்ந்தவை என்பதுடன் ஒவ்வொரு ஆமையும் சுமார் 100 கிலோ எடை கொண்டது எனவும் குறித்த வீட்டில் சந்தேக நபர்கள் எவரும் இருக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த கடலாமைகள் காவல்துறையினரின் மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு கடலில் விடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் குறித்து மன்னார் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.