Loading...
விஷால் குடும்பத்தில் அனைவருக்குமே சினிமாவுடன் ஏதேனும் ஒரு தொடர்பு இருந்து தான் வருகிறது. அவரது தந்தை ஜி.கே.ரெட்டி திரைப்படத் தயாரிப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரைத் தொடர்ந்து விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவும் தொடக்கத்தில் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வந்தார். விக்ரம் கிருஷ்ணாவின் மனைவியான `திமிரு’ பட புகழ் ஷ்ரியா ரெட்டி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், விஷாலின் தந்தையும் நடிப்பில் குதித்துள்ளார். தமிழில் மிஷ்கின் இயக்கிய படம் `பிசாசு’. இதன் கன்னட ரிமேக் `ரக்சாஷி’. இதில் தமிழில் ராதாரவி நடித்த வேடத்தில் விஷாலின் தந்தையும் பட தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி நடித்தார். இப்போது ஏ.வெங்கடேஷ் இயக்கி வரும் `நேத்ரா’ படத்தில் ஜி.கே.ரெட்டி நடிக்கிறார். இதில் கதாநாயகியின் தாத்தாவாக நடிக்கிறார். தாத்தா & பேத்தி சம்பந்தப்பட்ட சென்டிமென்ட் காட்சிகளில் ஒரே டேக்கில் நடித்து அவர் பாராட்டு பெற்றுவருவதாக படக்குழுனர் தெரிவித்தனர்.
Loading...
விஷால் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் `துப்பறிவாளன்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக `இரும்புத் திரை’, `சண்டக்கோழி 2′, மோகன்லாலுடன் இணைந்து மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
Loading...