கொண்டக்கடலை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் கிடைக்கும் சத்துக்களைப் பெறலாம்.
எடையைக் குறைக்கவும், இதய நோயை கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன.
தேவையான பொருட்கள்
கொண்டைக்கடலை – 1 கப்
காய்ந்தமிளகாய் – 5
பூண்டு – 2 பல்
சீரகம் – சிறிதளவு
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கொண்டைக்கடலையை 5 மணி நேரம் ஊறவைத்து பூண்டு, காய்ந்தமிளகாயுடன் கிரைண்டரில் தோசை மாவு பதத்திற்கு அரைத்து உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
மாவை புளிக்க வைக்கத் தேவையில்லை.
கடாயை அடுப்பில் வைத்து அரை டீஸ்பூன் சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்து மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி தோசையாக வார்த்து எண்ணெய் விட்டு எடுத்து சூடாக பரிமாறவும். சூப்பரான சத்தான கொண்டைக்கடலை தோசை ரெடி.