அமெரிக்காவின் அப்பிள் நிறுவனம் தங்கள் புதிய உற்பத்தில் நிலையத்தை இந்தியாவின் கர்நாடகா பிராந்தியத்தில் ஆரம்பிப்பதற்கு ஆயத்தமாகியுள்ளது.
இந்த புதிய உற்பத்தியில் அப்பிள் தொலைப்பேசிகளை மாத்திரம் உற்பத்தி செய்வதற்கு அந்த நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் இந்தியாவில் இருந்து, இலங்கை உட்பட தொற்காசிய நாடுகளுக்கு இந்த ஆப்பிள் கையடக்க தொலைப்பேசிகள் விற்பனை செய்யப்படவுள்ளன.
2016ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் 200 மில்லியன் கையடக்க தொலைப்பேசிகளை விற்பனை செய்துள்ள நிலையில் இந்தியாவில் 2.5 மில்லியன் விற்பனை மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் எதிர்வரும் 5 வருடங்களுக்குள் இந்தியாவில் காணப்படும் மத்திய வகுப்பு வளர்ச்சி மற்றும் சந்தை நிலைமைகள் தொடர்பில் கருத்திற் கொண்டு இந்த முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் அப்பிள் போன்களின் விலைகளை விட, இந்தியாவில் தயாரிக்கப்படும் போன்களின் விலைகள் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.