சர்வதேச விமான பயணங்கள் வரலாற்றில் தற்போது உலகிலேயே மிக நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவை கோலாகலமாக தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கத்தார் நாட்டை சேர்ந்த Qatar Airways விமானம் தான் இந்த சேவையை தொடங்கியுள்ளது.
கத்தார் நாட்டின் தலைநகரான தோகாவில் இருந்து நியூஸிலாந்து நாட்டில் உள்ள Auckland நகருக்கு இந்த விமானம் புறப்பட தயாராக உள்ளது.
இந்த பயண தூரத்திற்கான கட்டணம் 1,447 பவுண்ட் ஆகும்.
நாளை(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.10 மணிக்கு தோகாவில் இருந்து புறப்படும் இந்த விமானம் மறுநாளான திங்கள் கிழமை காலை 7.30 மணிக்கு Auckland நகர் விமான நிலையத்தில் தரையிறங்கும்.
அதாவது, ஒட்டுமொத்தமாக 9,032 மைல் தூரத்தை இந்த விமானம் 16 மணி நேரம் 20 நிமிடங்கள் பயணத்தில் பறக்க உள்ளது.
காத்தார் நாட்டில் இருந்து புறப்படும் இந்த விமானம் துபாய், ஓமன், இந்தியா, இலங்கை மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளின் வான்வழியாக பறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.