பாலியல் துஷ்பிரயோகம் என்பது பெண்களின் வாழ்வில் மிகவும் கொடுமையான ஒரு அனுபவம்.
ஒரு நாள் அனுபவிக்கும் இந்த வேதனையில் இருந்து பெண்கள் மீண்டுவர பல வருடம் ஆகிறது.
ஆனால், ஒரு சில பெண்களுக்கு வாழ்க்கையில் பாலியல் தொல்லை ஏற்படுவதைவிட, பாலியல் தொல்லைக்குள் அடங்கிய ஒன்றுதான் வாழ்க்கை என ஆகிவிடுகிறது.
பாலியல் தொல்லை தொடர்பாக நிஜ வாழ்க்கையில் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளை போன்று, திரைப்பட காட்சிகளிலும் பலாத்காரம் தொடர்பான காட்சிகளை நடிக்கும் போது மனதளவிலும், உடலளவிலும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறோம் என கூறுகிறார்கள் நடிகைகள்.
இதுகுறித்து, நடிகை அலியா பட், அனுஷ்கா சர்மா மற்றும் சோனம் கபூர் ஆகியோர் பகிர்ந்துகொண்டது இதோ,
அனுஷ்கா சர்மா
NH10 படத்தின் படப்பிடிப்பின்போது என்னை பலாத்காரம் செய்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
அந்த காட்சியின் போது எனக்குள் மன அழுத்தம் அதிகமானது. முகம் மற்றும் வயிற்றில் குத்துவது போன்ற காட்சிகள் தேவைப்பட்டது.
பாலியல் தொடர்பான செய்திகளை பத்திரிகையில் படிப்பதை விட திரைப்படத்தில் நடிப்பது தான் மோசமான அனுபவமாக இருந்தது.
பலாத்கார காட்சி படமாக்கப்பட்ட அடுத்த 2 நாட்களுக்கு நான் உணர்வுப்பூர்வமாக மிகவும் பாதிக்கப்பட்டேன் என கூறியுள்ளார்.
அலியா பட்
Udta Punjab படப்பிடிப்பின் போது பலாத்கார காட்சிகளை என்னிடம் இயக்குநர் விவரிக்கும்போதே எனக்குள் பயம் அதிகமானது.
இந்த காட்சிகள் படமாக்கப்பட்டபோது நான் என்னை நானே நல்ல மனநிலையில் வைத்துக்கொள்வதற்காக அறைக்குள் அடைந்து கிடக்கமாட்டேன். மாறாக அறையை விட்டு வெளியேறி நடைபயிற்சி செய்வேன்.
இருப்பினும், நான் எனது தொழிலை அதிகமாக நேசிப்பதால், என்னை நான் கூலாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்வேன் என கூறியுள்ளார்.
சோனம் கபூர்
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் இவர், தனது 14 வயது பாலியல் ரீதியான தொல்லைக்கு ஆளானதை வெளிப்படையாக கூறியுள்ளார்.
இவர் கூறியதாவது, நான் ரோட்டில் நின்றுகொண்டிருந்தபோது நபர் ஒருவர் எனது பின்பக்கமாக நின்றுகொண்டு, எனது உடலை தொட்டுவிட்டு சென்றார்.
அவர் என்ன செய்கிறார், என்ன நடந்தது என்பதை என்னால் உணரமுடியவில்லை.
3 வருடங்கள் கழித்து திரைப்படம் ஒன்றில் இதுபோன்ற ஒரு காட்சியை பார்க்கும்போதுதான், நான் பாலியல் ரீதியாக தொடப்பட்டுள்ளேன் என்பதை புரிந்துகொண்டேன் என கூறியுள்ளார்.