தேங்காய் எண்ணெய்யில் குளித்த பெண் குளியல் தொட்டியில் மாட்டிக்கொண்டு 30 நிமிடம் வெளியே வரமுடியாமல் தவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண்மணி ஒருவர் மார்பக வலி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனால், உடல் சுறுசுறுப்போடு இயங்குவதற்காக தேங்காய் எண்ணெய் குளியல் எடுத்துள்ளார். அளவுக்கதிகமான தேங்காய் எண்ணெய்யை உடலில் தேய்த்துக்கொண்டு குளியல் தொட்டியில் சென்று அமர்ந்துள்ளார்.
தொட்டியில் அமர்ந்த பின்னர், இவரால் எழுந்திருக்க முடியவில்லை. எவ்வளவு முயற்சி செய்தும் வழுக்கி கொண்டே சென்றுள்ளது. இதனால் சுமார் 30 நிமிடங்கள் தொட்டிக்குள்ளேயே முடங்கி கிடந்துள்ளார்.
தொட்டிக்குள் மாட்டிக்கொண்டதை புகைப்படம் எடுத்த இப்பெண் அதனை சமூகவலைதளத்தில் வெளியிட்டு, அளவுக்கதிகமாக தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தியதால் இவ்வாறு மாட்டிக்கொண்டேன் என வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், 30 நிமிட போராட்டத்திற்கு பின்னர் சற்று நகர்ந்து, குழாயினை திறந்துவிட்டு தொட்டிக்குள் தண்ணீர் நிரம்பியதும் எழுந்து வெளியே வந்துள்ளார்.