ரஜினி தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார் என்று அவரை ஏன் தூக்கிவைத்து கொண்டாடுகிறீர்கள் என பலரும் கேள்வி கேட்கின்றனர்.
அப்படி கேப்பவர்களுக்கு வலைதளத்தில் ஒருவர் காமடியாக இப்படி ஒரு பதிவு செய்துள்ளார். பதிவில்,
ரஜினி தமிழ் மக்களுக்காக செய்த உதவிகள் பல விளம்பர நோக்கமற்றவை பிரதிபலன் பாராதவை
அவற்றில் சில துளிகள்…
முத்து படத்துல தமிழ் மக்களுக்கு தனது சொத்து முழுவதையும் எழுதி வைத்துவிட்டார்! மறந்துட்டியா படத்தை திரும்ப ஒருமுறை பார்.
சிவாஜி படத்துல தமிழ்நாட்டுக்கு காலேஜ், ஆஸ்பத்திரி, ரோடு எல்லாம் செஞ்சாச்சு!
அருணாசலத்துல 30 நாள்ல 30 கோடிய தமிழக மக்களுக்கு கொடுத்தாச்சு!
படையப்பால தமிழக மக்களுக்கு கருணை வள்ளலா வாழ்ந்தாச்சு!
பாபால மந்திரம் மூலம் தமிழ் மக்களுக்கு பணி ஆத்தியாச்சு!
லிங்கா படத்துல தமிழக மக்களுக்கு சொத்தையெல்லாம் வித்து அணை கட்டியாச்சு!
இதுக்குமேலேயும் என் தலைவன்கிட்ட வேற என்னதான்யா எதிர்பாக்குறீங்க…?
தமிழக வெள்ள மழை பாதிப்புக்கு தலைவர் ஏதாவது செய்யனும்னு எதிர்பாக்குறீங்களா?
இவ்ளோ செஞ்சவரு இதுகூட செய்ய மாட்டாரா?
அடுத்த படத்துல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆளுக்கு 1 லட்சம் கொடுக்குற மாதிரி சீன் வைக்கிறோம் போதுமா?
இப்ப திருப்தியா? போதாது என்றால் சொல்லுங்கள் அடுத்து வரவுள்ள படத்தில் தன் பேத்தி வயதில் இருக்கும் பெண்களுடன் நடித்து தமிழர்களை மகிழ்விப்பார்.
ஆனா அதுக்கப்புறமும் என் தலைவனை நோக்கி தமிழ்நாட்டுக்கு என்ன செய்ஞ்சீங்க? என்ன செய்ஞ்சீங்கன்னு கேக்க போறீங்க நீங்க. இப்படி அவரது வலைதள பதிவு இருந்தது