இந்திய மக்கள் தொகையில் 10-14 சதவீதம் தம்பதியருக்கு குழந்தையின்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு 6 தம்பதியரில் ஒருவருக்கு என அதிகமாகி கொண்டிருக்கிறது. வளர்ந்து வரும் அதிநவீன மருத்துவ உபகரணங்களும், சிகிச்சைகளும் குழந்தையின்மை சிகிச்சை செய்வதில் பெரிதும் உதவுகிறது.
அப்படிப்பட்ட அதிநவீன சிகிச்சை முறையே ‘ஹிஸ்ட்ராஸ்கோப்பி’ எனப்படும் ‘கர்ப்பப்பை உள்நோக்கும் நுண்துளை சிகிச்சை’ முறையாகும். இந்த சிகிச்சையில் தகுந்த மயக்கம் கொடுத்து, மிகவும் சிறிய அளவு டெலஸ்கோப், கர்ப்பப்பை வாயின் வழியாக உள்செலுத்தப்படுகிறது. நீர் உட்செலுத்தி கர்ப்பப்பையை விரிவுபடுத்தி உட்பக்கம் துல்லியமாக நோக்கப்படுகிறது.
இந்த பரிசோதனையின் மூலம் கர்ப்பப்பை தொற்று, சதை வளர்ச்சி, கட்டிகள் (பைப்ராய்டு) ஆகியவற்றை கண்டறியலாம். இந்த ஹிஸ்ட்ராஸ்கோப்பி மூலம் பரிசோதனைகளும், நுண்துளை அறுவைச்சிகிச்சை மூலம் பிரச்சினைகளையும் சரி செய்ய முடியும். இதனால், தம்பதியருக்கு இயற்கையாக கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.இந்த உயர்தர ஹிஸ்ட்ராஸ்கோப்பி சிகிச்சை முறை சாய் ஜீவன் கருத்தரித்தல் மையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்யப்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் அதிநவீன ஜெர்மன் தொழில்நுட்ப கருவிகளுடன் கூடிய எச்.டி. கேமரா மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏராளமான தம்பதியருக்கு இந்த சிகிச்சை வெற்றியளித்து, குழந்தை பேறு கிடைத்துள்ளது.மேலும், ஆலோசனைகளுக்கும், சந்தேகங்களுக்கும் ஸ்ரீநிவாசா மருத்துவமனை, தேரேகால்புதூர், நாகர்கோவில், செல்: 8903000505, 8903000105-ல் தொடர்பு கொள்ளலாம்.
– டாக்டர் ஜி.சுதாவாசன், சிறப்பு சிகிச்சை நிபுணர்