அ.தி.மு.க சட்ட சபை உறுப்பினர்களுக்கான கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கூட்டம் கட்சியின் பொதுச் செயலர் சசிகலா நடராஜனின் தலைமையில் நடைபெறும் என கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த கூட்டத்தின் போது முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் உரையாற்றுவார்கள் எனவும் இதனைதொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா உரையாற்றுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கூட்டத்தின் போது சசிகலாவை முதல்வராக்குவது தொடர்பான கையெழுத்தும் பெறப்பட உள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளமையால் கட்சி உறுப்பினர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியிடங்களில் உள்ள உறுப்பினர்களை மீண்டும் சென்னை வர அழைப்பு விடுத்துள்ளதாகவும் கட்சி உறுப்பினர் ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.