பத்தாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரிலிருந்து இங்கிலாந்து வீரரான கெவின் பீட்டர்சன் விலகியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், கடந்த சில மாதங்களாக பல்வேறு லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வருவதால் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதில்லை என பீட்டர்சன் முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
‘இந்த முறை ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்கவில்லை. கடந்த சில மாதங்களாக பிக் பாஷ் லீக் உள்ளிட்ட போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தேன். அதற்காக தொடர்ச்சியாக பயணம் மேற்கொண்டிருந்தேன். அதனால் எதிர்வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.பி.ல் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற பிக் பாஷ் லீக் டி-20 போட்டியில் 8 போட்டிகளில் பங்கேற்ற பீட்டர்சன், 268 ஓட்டங்களை குவித்தார். கடந்த ஐ.பி.எல் தொடரில் புனே அணியில் இடம்பெற்ற பீட்டர்சன் 4 போட்டிகளில் மாத்திரமே விளையாடிய நிலையில் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.