தனுஷுக்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்த அனுபமா பரவமேஸ்வரன், நடிகர் சர்வானந்தை காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
“பிரேமம்” என்ற மலையாளப் படம் மூலமாக பிரபலமான அனுபமா, கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.
அனுபமா சர்வானந்துடன் இணைந்து நடித்த “சதாமனம் பவதி” என்கிற தெலுங்குப் படம் சமீபத்தில் வெளியானது.
குறித்த படத்தில் நடித்ததன் மூலம் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சமூக வலைத்தளத்தில் இருவரும் ஜோடியாக உள்ள படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இருவரும் டேட்டிங் வரை போய்விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து இருவரும் இதுவரை எந்தக் கருத்தும் கூறவில்லை.
இதன் காரணமாக இவர்களது காதல் விவகாரம் உண்மையாக இருக்குமோ என சினிமா வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன.