பீர்க்கங்காய் நீர்ச்சத்து மிக்கது. மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்ட பீர்க்கங்காய், சிறுநீரை பெருக்கும் அற்புத மருந்து. கண் நோய்களை தீர்க்கும். உடல் எடையை குறைக்க கூடியது. அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடலுக்கு அதிக நன்மை கிடைக்கும். தோலை நீக்காமல் சமைக்க வேண்டும். நார்ச்சத்தை உடைய பீர்க்கங்காய் புற்றுநோயை தடுக்கும். நச்சுக்களை வெளியேற்றும். பீர்க்கங்காய் தோலை பயன்படுத்தி நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம்.
2 ஸ்பூன் நல்லெண்ணெயில் உளுத்தம் பருப்பை லேசாக வறுக்கவும், பெருங்காயப்பொடி, பூண்டு, புளி, பீர்க்கங்காய் தோல், மிளகு பொடி, உப்பு சேர்த்து சட்னிபோல் தயார் செய்து சாப்பிடவும். இது மலச்சிக்கலை தடுக்கிறது. பீர்க்கங்காயை பயன்படுத்தி நீர்கடுப்பு, சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். பீர்க்கங்காய் சாறு 50 மில்லி எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு, பனங்கற்கண்டு, தேவையான அளவு நீர் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
இது சிறுநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்கும். தேங்கிய சிறுநீரை வெளியேற்றும். சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், வலியை போக்கும். சிறுநீரகத்தின் ஆயுட்காலம் கூடும். எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. எலுமிச்சை சாற்றை அதிகமாக எடுத்துக் கொள்வதால் கற்கள் உருவாகும் என கூறப்படுவது தவறு. எலுமிச்சைக்கு ராஜ கனி என்று பெயர். அது எந்த வகையிலும் தீங்கு செய்யாது. நன்மை தரக்கூடியது.
பீர்க்கங்காயை பயன்படுத்தி அல்சருக்கான மருந்து தயாரிக்கலாம். பீர்க்கங்காயை சிறு துண்டுகளாக்கி உப்பு சேர்த்து வேகவைத்து, அதனுடன் புளிப்பில்லாத தயிர் சேர்த்து கலந்து எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெயுடன் 2 சிட்டிகை மஞ்சள் பொடி சேர்க்கவும், அதனுடன் சிறிது சீரகத்தை போடவும். சீரகம் பொறிந்ததும், தயிருடன் சேர்ந்த பீர்க்கங்காயை சேர்க்கவும். இதை சாப்பிட்டால் அல்சர் குணமாகும்.
பீர்க்கங்காயில் இரும்புச்சத்து, தாது உப்பு, துத்தநாகம், வைட்டமின் சி சத்து உள்ளது. கண்களுக்கு அற்புதமான மருந்தாகிறது. இதில் கொழுப்பு சத்து மிகவும் குறைவாக உள்ளது. எரிசக்தி வெகு குறைவாக இருப்பதால் உடல் எடை அதிகரிக்காது. ரத்தத்தில் பித்தத்தின் அளவை குறைக்கக்கூடிய தேனீர் தயாரிக்கலாம். பீர்க்கங்காய் தசையை துண்டுகளாக்கி சுமார் 50 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். அதில் 2 சிட்டிகை மஞ்சள் பொடி போடவும்.