உக்ரைனில் தீவிரமாக யுத்தம் நடந்துவருவதால் அங்கிருந்து மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
அதன்படி கடந்த மாதம் 24 ஆம் திகதி போர் தொடங்கியதிலிருந்து 12 நாட்களில் ரஷ்யாவின் தீவிரமான தாக்குதல்களால் உக்ரைனில் இருந்து 17 இலட்சத்து 35 ஆயிரம் மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
போலந்து, ஹங்கேரி, ருமேனியா, சுலோவாக்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் இலட்சக்கணக்கான மக்கள் குவிந்து கிடக்கின்றனர். அத்துடன் ருமேனியா உள்ளிட்ட நாடுகளிலும் உக்ரைன் அகதிகள் இடம்பெயர்ந்து செல்வது கணிசமாக உள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அகதிகளுக்கான ஐ.நா.சபை உயர் அதிகாரி பிலிப்போ கிராண்டி டுவிட்டரில் உக்ரைனில் இருந்து 12 நாட்களில் 17 இலட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இவற்றில் 5 இல் 3 பங்கினர், அதாவது கிட்டத்தட்ட 10 இலட்சத்து 30 ஆயிரம் பேர் போலந்து சென்றதாகவும், 1,80,000 பேர் ஹங்கேரிக்கும், 1,28,000 பேர் ஸ்லோவாக்கியாவுக்கும் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.