கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் நாள். ஆடம்பரப் பொருட்களை வாங்கிக் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். பெற்றோர், பிள்ளைகள் வழியில் பெருமைக் குரிய சம்பவங்கள் நடைபெறும்.
வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டும் நாள். இடமாற்றச் சிந்தனை மேலோங்கும். வரவு திருப்திகரமாக இருந்தாலும் செலவுகளும் கூடுதலாகவே இருக்கும். வெளி வட்டாரத் தொடர்பு விரிவடையும்.
மறக்க முடியாத சம்பவமொன்று நடைபெறும் நாள். வெளியூர் பயணங்களால் நன்மை கிட்டும். அத்யாவசியப் பொருட்களை வாங்க அலைச்சல்களை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை அமையும்.
களைப்பை மறந்து உழைப்பில் ஈடுபடும் நாள். நிதி நிலையின் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். மனதில் இனம் புரியாத சந்தோஷம் குடிகொள்ளும்.
கனவுகள் நனவாகும் நாள். செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகரிக்க முற்படுவீர்கள். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். செல்வ நிலை உயரும். அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட அல்லல்கள் அகலும். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள்.
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வாங்கல் கொடுக்கல்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் தாம தம் ஏற்படலாம். பிடிவாத குணத்தை தளர்த்திக் கொள்வது நல்லது.
சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். நண்பர்கள் நம்பிக்கைக் குரிய விதம் நடந்து கொள்வர்.
எதிர்ப்புகள் விலகி ஏற்றம் காணும் நாள். உத்யோகம், தொழி லில் எதிர்பார்த்த மாற்றங்கள் வந்து சேரலாம். பொருளாதார நிலையை உயர்த்த புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
வாய்ப்புகள் வாயில் தேடி வந்து சேரும் நாள். பிள்ளை களின் செயல்பாடுகளில் பெருமை யடைவீர்கள். மாமன், மைத்துனர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம்.
நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். வாகனப் பயணங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். தாய் வழி உறவினர் களால் ஏற்பட்ட தகராறுகள் அகலும். கடித அனுகூலம் உண்டு.
தனவரவு திருப்தி தரும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கை யோடும் பணிபுரிவீர்கள். வாங்கல் கொடுக் கல்களை ஒழுங்குபடுத்திக்கொள்ள முற்படுவீர்கள். இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும்.