Loading...
ஏமனின் அப்யான் மாகாணத்தில் லோதர் என்ற இடத்தை கைப்பற்ற முன்னேறிய அல்-கொய்தா தீவிரவாதிகள் 13 பேரை அந்த ஊரின் வலுவான பழங்குடியினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
அங்கிருக்கும் மக்கள் வசிக்கும் கட்டிடங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அல்-கொய்தா தீவிரவாதிகள், நேற்று (சனிக்கிழமை) தாக்குதல் நடத்தினர்.
Loading...
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பழங்குடியினர் சுமார் 2 மணி நேரம் போராடி அல்-கொய்தா தீவிரவாதிகளை விரட்டியடித்தனர்.
ஏமன் அரசியலில் இந்த சக்தி வாய்ந்த பழங்குடியினரின் பங்கு மிக மிக அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...