இலங்கையில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக மாற்ற போவதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளதார்.
அதன் பலனாக விபசார தொழிலும் சிறுவர் துஷ்பிரயோகங்களும் மேலும் அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே கருக்கலைப்பை சட்டபூர்வமாக்குவதை வன்மையாக கண்டிக்கின்றோம். கருக்கலைப்பும் மனித கொலையென்ற கருதப்பட வேண்டும் என மக்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கான அறக்கட்டளை நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிகையிலேயே மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாவன,
கடந்த நாட்களில் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் பல காரணங்களை முன்வைத்து அதன் மத்தியில் கருக்கலைப்பையும் சட்டபூர்வமாக்குகின்ற நடவடிக்கை குறித்து ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார். என்ன காரணங்கள் கூறப்பட்டாலும் கருகலைப்பு என்பது கொலைக்கு நிகரான செயற்பாடாகும். அத்துடன் கருகலைப்பு என்பது எமது நாட்டில் பிரதானமாக பின்பற்றப்படும் நான்கு ஆகமங்களுக்கும் முரணானது என நீதி அமைச்சரே சுட்டிக்காட்டியும் உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.