நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீண்டும் அவரது சர்ச்சைக்குரிய நண்பர்கள் குழுவுடன் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆட்சியின் போது அதிக குற்ற செயல்களினால் முன்னாள் ஜனாதிபதியை, மக்கள் வெறுப்பதற்கு காரணமாக இருந்தவர் நாமல் ராஜபக்ச என மஹிந்தவை நேசிக்கும் அவரது பெரும்பான்மை ஆதவாளர்கள தெரிவித்துள்ளனர்.
நாமல் ராஜபக்ச தனது தந்தையின் அதிகாரத்தை பயன்படுத்தி மேற்கொண்ட தவறான செயற்பாடுகளே இதற்கு காரணமாகும். நாமலினாலே மஹிந்த தனது அதிகாரம் உட்பட அனைத்தையும் இழந்து விட்டார் என கூறப்படுகின்றது.
நாமல் ராஜபக்சவின் வாழ்க்கை இப்படி மாற்றமடைவதற்கு காரணமாக இருந்த நண்பர்களே நாமலின் குற்றச் செயல்கள் தொடர்பில் தகவல் அறிந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி தோல்வியடைந்த வீட்டிற்கு சென்ற மஹிந்த ராஜபக்ச, நாமலின் நிலையை உயர்த்துவதற்கு பல முயற்சி மேற்கொண்டுள்ள போதிலும், அவரது நண்பர் அதற்கு இடமளிக்கவில்லை.
அத்துடன் நாமல் மீண்டும் அதே குழுவுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மீண்டும் நாமலின் நிலைக்கு ஆபத்து ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.