Loading...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த வருடம் மே மாதமளவில் பிரதமர் சீனா பயணிக்கவுள்ளார் என சீனாவிற்கான இலங்கை தூதுவர் நேற்றைய தினம் அறிவித்துள்ளார்.
சீனாவுடன் வர்த்தக உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ளும் நோக்கிலேயே இந்த விஜயம் அமையவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
அண்மையில், ஹம்பாந்தோட்டையில் சீனாவினால் ஆரம்பிக்கப்பட்ட கைத்தொழில் வலயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பிலும் குறித்த விஜயத்தின் போது கலந்துரையாடப்படவுள்ளதாக சீனாவிற்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...