முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடியுரிமை ரத்து செய்யப்படாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் குடியுரிமையை ரத்து செய்வதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நீதிமன்றக் கட்டமைப்பு சுயாதீனமான அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடியுரிமையை ரத்து செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக செய்யப்பட்டு வரும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையோ, அடிப்படையோ கிடையாது என ராஜித சேனாரத்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலகுணவர்தன உள்ளிட்ட சிலர் மஹிந்தவின் குடியுரிமையை ரத்து செய்ய அரசாங்கம் சதித்திட்டம் தீட்டிவருவதாக அண்மைய நாட்களாக ஊடகங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.