சைபர் குற்றங்களில் இருந்து தப்பிக்க நாம் நினைவில் வைத்துகொள்ள வேண்டிய 5 விஷயங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலான வணிக பரிவர்த்தனைகள் யூபிஐ மூலமாகத்தான் நடைபெறுகிறது. யூபிஐ பரிவர்த்தனைகள் எந்த அளவுக்கு நமக்கு எளிதாக இருக்கிறதோ, அதேசமயம் மோசடி நடைபெறுவதற்கும் வழிவகுக்கிறது.
யூபிஐ பரிவரத்தனை குறித்து விழிப்புணர்வு இல்லாதவர்கள் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்துவிடுகின்றனர். இந்நிலையில் சைபர் குற்றங்களில் இருந்து தப்பிக்க நாம் நினைவில் வைத்துகொள்ள வேண்டிய 5 விஷயங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது.
1) யூபிஐ பின் பணம் அனுப்புவதற்கு மட்டுமே கேட்கப்படும். பணம் பெறுவதற்கு யாராவது பின் நம்பர்கள் கேட்டால் தர வேண்டாம்.
2) பணம் அனுப்பும் முன் போன் நம்பர், பெயர், யூபிஐ ஐடி ஆகியவற்றை சரிபார்த்த பின்னரே பணம் அனுப்பவும்.
3) யூ.பி.ஐ பின்னை யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம்.
4) தெரியாத நபர்களிடம், கடைகளுக்கு சென்று பணம் அனுப்புவதற்கு யூ.பி.ஐ ஐடியை தர வேண்டாம். யூ.பி.ஐ மூலம் பணம் அனுப்ப தெரியாதவர்கள் வங்கி மூலம் பணம் அனுப்புவதே நல்லது.
5) யூ.பி.ஐ குறித்த சந்தேகங்கள், பிரச்சனைகளுக்கு வங்கி அல்லது யூபிஐ சேவையை வழங்கும் நிறுவனத்தை மட்டும் தொடர்புகொள்ளவும்.