‘போகன்’ வெற்றியைத் தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக விஜய் இயக்கத்தில் உருவாகும் ‘வனமகன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, வருகிற நாளை ‘வனமகன்’ டீசரை படக்குழுவினர் வெளியிடவிருக்கின்றனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருப்பதியில் முக்கியமான இடங்களில் படமாகி வருகிறது.
இப்படத்தில் ஜெயம் ரவி ரொம்பவும் ரிஸ்க் எடுத்து சண்டைக் காட்சிகளில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் கதாநாயகியாக சாயிஷா சாய்கல் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் விஜய்யின் அப்பாவும், பிரபல தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பன் தயாரித்து வருகிறார்.