இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி இன்று அதிகாலை உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜார்க்கண்ட் நகருக்கு வந்தார். விமானம் மூலம் ஜாலிகிரான்ட் விமான நிலையத்திற்கு மனைவி சாக்சியுடன் வந்த அவர், அங்கிருந்து முசோரிக்கு காரில் சென்றார். முசோரியில் நாளை தனது குழந்தையின் 2-வது பிறந்தநாளைக் கொண்டாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முசோரிக்கு டோனி வரும் தகவல் அறிந்ததும், அவர் தங்கும் ஓட்டல் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். காரில் இருந்து இறங்கிய டோனி ரசிகர்களைப்பார்த்து கையசைத்துவிட்டு ஓட்டலுக்குச் சென்றார்.
டோனியும் சாக்சியும் முசோரிக்கு வருவது புதிதல்ல. இருவரும் காதலிக்கும்போது அடிக்கடி வந்துள்ளனர். பின்னர் டேராடூனில் அவர்களின் திருமணம் நடந்தது.
கேப்டன் பதவியில் இருந்து விலகிய டோனி, சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை இந்திய அணி கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.