அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிவரும் ‘விவேகம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. கட்டுமஸ்தான உடம்புடன் அஜித் தோன்றிய அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர், அவரது ரசிகர்களை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த உற்சாகத்துடனேயே அஜித் பிறந்தநாளான மே 1-ந் தேதி இப்படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து ஜுன் முதல் வாரத்தில் இப்படத்தின் ஆடியோவையும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அஜித் – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.