2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் பத்ம விருதுகளை பெற்றுள்ளனர்.
கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதற்கிடையே, 2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்ஜி, கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை உள்பட 17 பேருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கினார். காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனர் சைரஸ் பூனாவாலா உள்பட பலரும் பத்ம விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.