உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 27-வது நாளை எட்டியுள்ள நிலையில், மரியு போல் நகரில் இருந்து உக்ரைன் ராணுவத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ரஷியா கெடு விதித்துள்ளது.
09.06: அமெரிக்கா, மற்ற நாடுகள் உக்ரைனுக்கு நீண்ட தூர வான் பாதுகாப்பு ஆயுதங்கள் வழங்குவது குறித்து ஆலோசிக்க இருப்பதாக பென்டகன் செய்தி வெளியிட்டுள்ளது.
09.05: கீவ் நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள மகாரிவ் நகரை உக்ரைன் துருப்புகள் ரஷியாவிடம் இருந்து மீட்டுள்ளது.
09.03: கடும் சண்டைக்கிடையில் மனிதாபிமான வழித்தடத்தை பயன்படுத்தி 8,057 மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறினர்.
6.40: நேட்டோ அமைப்பு, ரஷியாவை கண்டு பயப்படுவதாகவும், உக்ரைனை அது ஏற்றுக் கொள்கிறதா, இல்லையா என்பதை வெளிப்படையாக இப்போது அறிவிக்க வேண்டும் என்றும், அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.
3.30:உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள வணிக வளாகம் மீது ரஷியா நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர். அந்த வணிக வளாகத்தை உக்ரைன் ராணுவத்தினர் ராக்கெட் அமைப்புகளை சேமிக்க பயன்படுத்தி வந்ததாக ரஷிய படையினர் தெரிவித்துள்ளனர்.
1.50: உக்ரைன்-ரஷியா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை இன்று மீண்டும் தொடங்கும் என ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்துள்ளார். மரியுபோல் நகரில் உள்ள அனைத்து உக்ரைன் வீரர்களும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ரஷியா கெடு விதித்துள்ளது. எனினும் இதை உக்ரைன் நிராகரித்து விட்டது
21-03-2022
23.55: கார்கிவ், மரியுபோல் மற்றும் கீவ் நகரங்களை ஒப்படைக்க வேண்டும் என்று, மாஸ்கோ இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். முதலில் அவர்கள், எங்களை அழித்த பின்னரே ரஷியாவின் இறுதி உத்தரவு நிறைவேறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
22.50: உக்ரைனில் உள்ள முக்கியமான இலக்குகளை தாக்கும் வகையில் அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணையை தொடர்ந்து பயன்படுத்த உள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
20.20: ரஷியாவின் நடவடிக்கைகள் அரச பயங்கரவாதம் என உக்ரைன் பாதுகாப்புத்துறை மந்திரி ஒலெக்சி ரெஸ்னிகோவ் தெரிவித்துள்ளார்.
19.50: ரஷியாவில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நீதிமன்றம் தடை செய்திருப்பதாக டிஏஎஸ்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
19.40: ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையில் இன்னும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று ரஷியா கூறி உள்ளது. ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பை சாத்தியமாக்குவதற்கு அடிப்படையான பேச்சுவார்த்தைகளில் இன்னும் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று ரஷிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
17.05: உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள வணிக வளாகம் மீது இரவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 6 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஏ.எஃப்.பி. செய்தியாளர் கூறியுள்ளார்.
17.00: உக்ரைன்-ரஷிய படைகள் இடையே நேருக்கு நேர் துப்பாக்கி சண்டை நடைபெறும் நிலையில், கீவில் இன்று முதல் புதன்கிழமை காலை வரை புதிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
16.00: சுமி நகருக்கு வெளியே உள்ள ரசாயன ஆலையில் ரஷிய ஷெல் குண்டு ஒன்று தாக்கியதில், 50 டன் எடையுள்ள அமோனியா தொட்டியில் கசிவு ஏற்பட்டிருப்பதாக உக்ரைனின் தலைமை வழக்கறிஞர் கூறி உள்ளார்.