வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 3 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் மற்றும் 2-வது போட்டி டிராவில் முடிந்தது.
3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செயிண்ட் ஜார்ஜ் நகரில் நாளை தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால் இரு அணிகளும் வெற்றி பெற முனைப்பு காட்டும்.
இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோரூட் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளார். அதே போல் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத் பெயிட் 2-வது டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார். இப்போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.