Loading...
கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக வலம் வந்தவர் டேனியல் பாலாஜி. இப்படத்தை தொடர்ந்து அவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்புகள் குவிந்தது. அந்த வாய்ப்பையெல்லாம் சரியாக பயன்படுத்தி, தற்போது முன்னணி நடிகர்கள் பலருக்கு வில்லனாக நடித்து வருகிறார்.
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘பைரவா’ படத்தில் இவருடைய வில்லத்தனமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில், அடுத்ததாக அரவிந்த்சாமி நடிக்கும் ‘வணங்காமுடி’ படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடிக்கவிருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.
Loading...
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘வணங்காமுடி’ படத்தில் நான் ஸ்டைலிஷ் வில்லனாக வருகிறேன். எனக்கு இந்த படத்தில் ஜோடி இருக்கிறார். என்னுடைய காட்சிகளை மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்குவார்கள் என்று கூறியுள்ளார்.
இப்படத்தில் சாந்தினி, ரித்திகா சிங், அட்டக்கத்தி நந்திதா என்று மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ‘புதையல்’ படத்தை இயக்கிய செல்வா, இப்படத்தை இயக்குகிறார்.
Loading...