இந்தியாவில் ஏமாற்றிய காதலனுடன் சேர்த்து வைக்ககோரி இறந்த குழந்தையுடன் பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் போராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் கனகராஜா, இவரும் திவ்யா (19) என்ற பார்வையில்லாத பெண்ணும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.
பல இடங்களில் இருவரும் சென்று உல்லாசமாக இருந்ததால் திவ்யா கர்ப்பமடைந்தார்.
மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ள கனகராஜாவை அவர் வலியுறுத்தியுள்ளர்,ஆனால் இதற்கு அவர் மறுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காவல் நிலையத்துக்கு கையில் ஒரு பையுடன் திவ்யா வந்தார். பின்னர் பையிலிருந்து தன் வயிற்றில் இருந்த குழந்தை கருசிதைவானதை எடுத்து பொலிசாருக்கு காட்டியுள்ளார்.
இதை கண்ட பொலிசார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் தன்னை ஏமாற்றிய காதலனை தன்னுடன் சேர்த்து வைக்க திவ்யா பொலிசாரிடம் கோரினார்.
அவர் புகாரை ஏற்று கொண்ட பொலிசார் தலைமறைவாகியிருந்த கனகராஜாவை கண்டுபிடித்து, அவருக்கு புத்திமதி கூறி திவ்யாவுடன் திருமணம் நடத்தி வைத்தார்கள்.