Loading...
ஒருவருக்கு தொடர்ச்சியாக வயிறு உப்பிசம் அல்லது வயிற்றில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் அதற்கு, அவர்கள் சாப்பிடும் உணவு பழக்கவழக்கத்தினால், ஏற்படும் கொழுப்புகள் மட்டுமே காரணம் அல்ல.
Loading...
அன்றாடம் நாம் செய்து வரும் ஒருசில உடல் ரீதியான பழக்கவழக்கங்களும் இது போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
வயிறு வீங்கிக் கொள்வதற்கான காரணம் என்ன?
- நாம் தினமும் அதிகப்படியான மன அழுத்தத்துடன் இருப்பதும் நமது வயிறு வீக்கத்திற்கு ஒரு காரணமாகும். எப்படியெனில் மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, நமது உடம்பில் ஹார்மோன்கள் மாற்றம் அடைந்து, செரிமான பிரச்சனை மற்றும் வயிற்றுத் தொடர்பான பல பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
- அன்றாடம் தினமும் ஒருவர் மலத்தை வெளியேற்றாமல், சீரான இடைவெளியில் சிறுநீர் கழிக்காமல் இருந்தால், நமக்கு வயிறு உப்பிசம் அடைந்தது போல வீங்கிக் கொள்ளும். எனவே இந்த பிரச்சனையை தடுப்பதற்கு, அடிக்கடி நீர், ஜூஸ் போன்றவற்றை அதிகமாக குடிக்க வேண்டும்.
- நாம் தினமும் உணவை சாப்பிடும் போது, எப்போதுமே மெதுவாக மென்று விழுங்க வேண்டும். அதை விட்டு வேகமாக சாப்பிடுவது என்ற பெயரில் மென்று சாப்பிடாமல் உணவை முழுங்கினால், அதிக அளவிலான காற்று நமது உடம்பிற்குள் சென்று வயிற்று உப்புசத்தை ஏற்படுத்துகிறது.
- ஒருவர் நாள் முழுவதும் நாம் போதிய அளவில் நீரை குடிக்காமல் இருந்தால், அது நமது உடம்பில் வயிற்று உப்புசத்தை உண்டாக்கி, நமக்கு செரிமான பிரச்சனையை ஏற்படுத்துகிறது. எனவே தினமும் போதுமான அளவில் நீரை குடிக்க வேண்டும்.
Loading...