தல’ அஜித்தின் விவேகம் படத்தின் டீஸர் அவரது பிறந்தநாளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீரம், வேதாளம் படத்துக்கு பின் சிவா இயக்கத்தில் ’தல’ அஜித் நடிக்கும் படம், ‘விவேகம்’.
இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ சமீபத்தில் வெளியானது. அன்று முதல் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களை முற்றிலுமாக ஆக்கிரமித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கு மேலும் இன்ப அதிர்ச்சியாக இப்படத்தின் டீஸர் ‘தல’ அஜித் பிறந்தநாளான மே-1ல் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 அல்லது தல பிறந்தநாளான ’மே-1’ படத்தை வெளியட திட்டமிட்ட படக்குழு, தற்போது இத்திட்டத்தை கைவிட்டு கொஞ்சம் தள்ளி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இருப்பினும் ‘தல’ ரசிகர்களுக்கு விருந்து வைக்க முடிவு செய்த படக்குழு அட்லீஸ்ட் அவரது பிறந்தநாளில் படத்தின் டீஸ்ரை வெளியிட முடிவு செய்துள்ளது.
திட்டமிட்ட படி மே-1ல் டீஸர் வெளியானால், ஜூன்-22ல் படம் வெளியாக வாய்ப்பு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.