Loading...
இடைக்கால அரசாங்கத்திற்கு உடன்பட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மறுத்துள்ளார்.
அனைத்து அமைச்சர்களும் தங்கள் இராஜினாமா கடிதங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று கையளித்ததை அடுத்து அவர் ருவிட்டரில் இந்த விடயம் குறித்து பதிவிட்டுள்ளார்.
இடைக்கால அரசு என்பது உட்கட்சி அரசியலைத் தவிர வேறில்லை என தெரிவித்துள்ள அவர், புதிய இலங்கையானது வலுவான மாற்றங்களுடனேயே அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்றும் வெறும் தலைமை மாற்றங்களுடன் மட்டுமல்ல என்றும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Loading...