Loading...
ஆரோக்கியம் நிறைந்த பழங்களில் இலந்தைப் பழமும் ஒன்று.
குறிப்பிட்ட சீசன்களில் மட்டும் கிடைக்கும் இந்த பழத்தை அந்த சமயங்களில் அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
Loading...
இலந்தைப் பழமும் மாதக்கணக்கில் கெட்டுப் போகாமல் இருக்கும். அந்த பழத்தில் அவ்வளவு மகத்துவம் இருக்கிறது. அது உடலுக்கு பல நன்மைகளை தரும்.
நன்மைகள்
- இலந்தைப் பழத்தில் இருக்கும் சப்போனின் தூக்கத்தைத் தூண்டி, நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.
- கிடைக்கும் நேரங்களில் ஒரு கைப்பிடி அளவுக்கு இலந்தைப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.
- இதிலுள்ள அதிக அளவிலான நார்ச்சத்து வயிற்றுப் பிரச்சினைகளைச் சரிசெய்து ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
- இலந்தைப் பழத்தில் உப்பின் அளவு மிகக் குறைவு. குறைந்த சோடியமும் அதிக அளவு பொட்டாசியமும் நிறைந்திருக்கின்றன.
- பொட்டாசியம் ரத்தக் குழாய்களின் இறுக்கங்களைத் தளர்த்தி, இலகுவாக வைத்திருக்க உதவுகிறது.
- அதனால் ரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, உயர் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும்.
- இலந்தைப் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் எலும்புகள் உறுதியடையும்.
- ஆஸ்ட்டிரியாபொராசிஸ் போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுகிறவர்கள் அடிக்கடி இலந்தைப் பழம் சாப்பிட்டு வந்தால் பிரச்சினை கட்டுக்குள் வரும்.
Loading...