ஐ.பி.எல். ரி-20 தொடரின் 14ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
புனே மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சூர்யகுமார் யாதவ் 52 ஓட்டங்களையும் திலக் வர்மா ஆட்டமிழக்காது 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சில், பெட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 162 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 16 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பெட் கம்மின்ஸ் ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களையும் வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில், டைமல் மில்ஸ் மற்றும் முருகன் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் டேனியல் சேம்ஸ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 15 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 4 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களையும் 2 விக்கெட்டுகளையும் சாய்த்த பெட் கம்மின்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.