அமெரிக்காவில் இனி எதாவது விபரீதம் நடந்தால் நீதிமன்ற அமைப்பை சாடுங்கள் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஜனாதிபதியான டிரம்ப் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இஸ்லாமியர்களை பெரும்பான்மையாகக் கொண்ட 7 முக்கிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த உலகமக்கள் பலர் டிரம்ப்பிற்கு எதிராக போராட்டம் நடத்தினர். மேலும் டிரம்ப்பின் இந்த அதிரடி உத்தரவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் டிரம்ப்பின் உத்தரவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கினர். இது டிரம்ப்பிற்கு பெரிதும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதனால் அவர் நீதிபதியின் இந்த தீர்ப்பினால், மிக ஆபத்தானவர்கள் நாட்டுக்குள் வர வாய்ப்பு இருக்கிறது. இது மிக மோசமான முடிவு என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ஒரு நீதிபதி நமது நாட்டை அபாயத்தில் தள்ளுவார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஏதாவது விபரீதம் நடந்தால், அவரையும் நீதிமன்ற அமைப்பையும் சாடுங்கள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அதைத் தொடர்ந்து மக்கள் (அமெரிக்காவிற்குள்) நிரம்பி வழிகிறார்கள்.அமெரிக்காவிற்குள் வரும் மக்களை மிகுந்த கவனத்துடன் பரிசோதிக்குமாறு உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளேன். இதனால் எனது வேலையை நீதிமன்றங்கள் கடினமாக்கியுள்ளன’ என்று தனது மற்றொரு டுவிட்டரில் கூறியுள்ளார்.