தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாளைய தினம் சசிகலா பதவியேற்க உள்ள நிலையில், முதல்வர் பன்னீர்செல்வத்தின் தொகுதியான போடிநாயக்கனூர் தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை கிராம பொதுமக்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டுள்ளதாகவும் அவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு வழங்கி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை போன்று சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறித்த இந்த போராட்டத்தில் அ.தி.மு.க பொறுப்பாளர்களும் கலந்து கொண்டுள்ளதாகவும் அவர்களும் சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.