Loading...
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சந்தை விலையிலும் பார்க்க குறைந்த விலையிலான 5 வகை பொருட்களை உள்ளடக்கிய நிவாரண பொதியை இலங்கை சதொச விற்பனை வலைப்பின்னல் ஊடாக வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய நிவாரணப் பொதிகளை இன்று ( சனிக்கிழமை ) தொடக்கம் சதொச கிளைகள் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளது .
Loading...
இதன்படி அரிசி, பால்மா, சீனி, தேயிலை உள்ளிட்ட பொதி ஒன்றின் விலை 1950.00 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
பொதுவாக சந்தையில் நிலவும் விலையுடன் ஒப்பிடுகையில் இந்த 5 வகை பொருட்களுகளை 700 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக் கழிவுடன் புத்தாண்டு நிவாரணப் பொதியாக நுகர்வோரினால் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் வர்த்தக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Loading...