புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலர் மீள ஒருங்கிணைந்து செயற்பட திட்டமிட்டமை தொடர்பிலான பல்வேறு தகவல்களை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணை ஒன்றூடாக வெளிப்படுத்தியுள்ளனர்.
கிளினொச்சியில் பாதைகைகளில் கடமையில் ஈடுபடும் பொலிஸாரை தாக்கி அவர்களது ஆயுதங்களை கொள்ளையிட்டு அதனூடாக தாக்குதல்களை நடத்துவது தொடர்பிலான தகவல்களையே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் வெளிப்படுத்திக்கொண்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் பல தடவை முயற்சி செய்யப்பட்டுள்ள போதும் பொலிஸாரின் ஆயுதங்களை கொள்ளையிட அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் அந்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதனைவிட கிளினொச்சியின் காடுகளில் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்களை மீளப்பெறும் நோக்கில் பல இடங்கள் தோண்டப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கைகள் இரவு வேளையிலேயெ பெரும்பாலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மீளுருவாகும் நோக்கில் முன்னாள் போராளிகள் சிலர் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த வல்லது எனவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முக்கிய அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.