இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு மேலும் 19 பேர் அகதிகளாக வந்துள்ளதாக தனுஷ்கோடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனை கடற்கரைபகுதியில் புகலிடம் கோரி வந்த 19 பேரை காவற்துறையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இவ்வாறு தஞ்சமடைந்த 19 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதையடுத்து முகாமிற்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர்.
ஏற்கனவே 20 பேர் வந்தநிலையில் மேலும் 19 பேர் இன்று தனுஷ்கோடிக்கு வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சிறிலங்காவில் தற்போது இடம்பெற்று வரும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடும் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பல்வேறு சிக்கல்களுக்கு மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாகவே படகு மூலம் கடல் வழியாக இந்தியாவுக்கு புகலிடம் கோரி செல்கின்றனர்.
நாளுக்கு நாள் இவ்வாறு இந்தியாவில் தஞ்சமடைவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.