சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் முற்றாக மூடப்பட்டுள்ளதால், மண்ணெண்ணெய் உற்பத்தி இல்லாததால் நாட்டில் மண்ணெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் குறிப்பாக தோட்டப் பகுதிகள் மற்றும் வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக மணிக்கணக்கில் வரிசையில் நிற்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியக் கடனுதவியில் அவ்வப்போது பெற்றோல், டீசல் கப்பல்களில் இறக்குமதி செய்யப்பட்டாலும் போதிய அளவு மண்ணெண்ணெய் இறக்குமதி செய்யப்படாததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிக்கிறது.
மண்ணெண்ணெய்க்கு அரசு விதித்துள்ள பெரும் வரிச்சலுகையால் இந்தியன் ஓயில் கூட்டுத்தாபனம் (ஐஓசி) மண்ணெண்ணெய் விற்பனை செய்வதில்லை.
மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக கடற்றொழிலாளர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.