Loading...
ஆண்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் தினமும் ஒரு பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வாருங்கள்.
உடலில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
Loading...
இது ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் பொருந்தும். பேரிச்சம் பழத்தை அன்றாடம் எடுத்துக் கொள்வதன் மூலம் பெறும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
நன்மைகள்
- பேரிச்சம் பழத்தில் கொழுப்புக்கள் மிகவும் குறைவு.
- பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி5, ஏ1, சி போன்றவையும் புரோட்டீன், நார்ச்சத்து போன்றவையும் வளமாக நிரறந்துள்ளது.
- பேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் உள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆரோக்கியமாகி, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
- பேரிச்சம் பழம் உடலின் ஆற்றலை மேம்படுத்தும்.
- இதில் இயற்கை சர்க்கரைகளான குளுக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் புருக்டோஸ் போன்றவை நிறைந்துள்ளன.
- அதிலும் தினமும் பேரிச்சம் பழத்தை பாலுடன் சேத்து உட்கொண்டு வந்தால், உடலின் சோம்பேறித்தனம் நீக்கப்பட்டு, உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.
- பேரிச்சம் பழத்தில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், இதனை உட்கொண்டால், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
- ஆராய்ச்சியாளர்கள், பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் உள்ளதால், அதனை அன்றாடம் ஆண்கள் உட்கொண்டு வந்தால், அவர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவதாக தெரிவித்துள்ளனர்.
- பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.
- பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை இரத்த சோகை உள்ளவர்கள் உட்கொண்டு வருவது நல்லது.
நீரிழிவு நோயாளிகளின் கவனத்திற்கு….
இனிப்பு என்பதால் நீங்கள் பேரிச்சம் பழத்தை ஒதுக்க வேண்டியது இல்லை. மருத்துவ ஆலோசனையுடன் நீங்களும் ஒரே ஒரு பேரிச்சை சாப்பிடுவதால் அதன் நன்மைகளை முழுமையாக பெற்று கொள்ள முடியும்.
Loading...