ஏப்ரல் 29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது.
சனி கிரகம், ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் தங்கி அதற்கேற்றார் போல பலன்களைத் தரக்கூடியவர்.
சனி தற்போது மகர ராசியில் சஞ்சரித்து வருகிறார். ஏப்ரல் 29 ஆம் தேதி கும்ப ராசிக்குள் பெயர்ச்சி ஆக உள்ளார்.
சனி பகவானின் அதிசார, வக்ர பெயர்ச்சியின் காரணமாக, எந்த ராசியெல்லாம் நற்பலனையும், கெடுபலனையும் பெறுவார்கள் என்பதைப் பார்ப்போம்.
சனிப்பெயர்ச்சியால் எல்லா ராசிக்காரர்களுக்கும் மாற்றம் இருக்கும், ஆனால் ஒரு ராசிக்காரர்கள் தான் அதிகம் அதாவது ஏழரை வருடங்கள் பாதிக்கப்படுவார்கள்.
ஏழரை நாட்டு சனி ஆரம்பம்
ஏப்ரல் 29-ம் தேதி சனி தனது சொந்த ராசியான கும்ப ராசியில் நுழைந்தவுடன் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி தொடங்கும்.
சனியின் பிடியில் இருந்து தப்பிய தனுசு
மறுபுறம், தனுசு ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுதலை கிடைக்கும்.
வரும் ஆபத்துகளையும், நன்மைகளையும் தடுக்க முடியாது. எனினும், ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள பரிகாரம் உண்டு.
பரிகாரங்கள்
உளுத்தம் பருப்பு, கருப்பு துணி, கருப்பு எள், உளுந்து போன்ற கருப்பு பொருட்களை ஒவ்வொரு சனிக்கிழமையும் ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்.
சனிக்கிழமையன்று ஆல மரத்தின் கீழ் கடுகு எண்ணெய் விளக்கை ஏற்றி வைப்பதன் மூலம், பொருளாதார பிரச்சனைகள் நீங்கும்.
சனிபகவானின் கோபத்தில் இருந்து தப்பிக்க சிறந்த வழி அனுமனின் அடைக்கலத்திற்கு செல்வதுதான்.
சனிக்கிழமையன்று அனுமன் சாலிசா அல்லது சுந்தர்காண்டத்தை பாராயணம் செய்யலாம். – சனிக்கிழமையன்று, ‘ஓம் ப்ரம் ப்ரீம் ப்ருண் சஹ சனிஷ்சராய நம’ மற்றும் ஓம் சனிச்சராயை நமஹ’ என்ற மந்திரங்களை உச்சரிக்கவும். இதனால் சனி பகவான் மகிழ்ச்சி அடைவார்.