காஜல் அகர்வால் தற்போது விஜய்,அஜித் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். இந்த நிலையில் திருமணம் எப்போது என்று அடிக்கடி பத்திரிகையாளர்கள் கேட்பது குறித்து காஜல் அளித்த பதில்…
“பொதுவாக நடிகைகளுக்கு 30 வயது ஆகிவிட்டால் உங்களுக்கு திருமணம் எப்போது என்று கேட்டு போகிற இடமெல்லாம் நச்சரிக்கிறார்கள். என்னிடமும் இதே கேள்வியை கேட்கிறார்கள். இது சுத்தமாக எனக்கு பிடிக்கவில்லை. கோபமாக வருகிறது.
திருமணத்துக்குப்பிறகு நடிகைகளுக்கு நாயகி வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார்கள். அக்கா, அம்மா வேடம் தான் கொடுக்கிறார்கள்.
நடிப்பையும் திருமணத்தையும் முடிச்சு போட்டு பார்க்க கூடாது .நடிப்பும் ஒரு வேலை தான். திருமணம் ஆன பெண்கள் வேலைக்குப் போகிறார்கள். நடிகைகளும் அது போல் தான். திருமணத்துப்பிறகும் சினிமாவில் தகுந்த வாய்ப்பு வழங்க வேண்டும்”.