ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 2.ஓ படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் நேரடி முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விருதுகள் பற்றி கூறும்போது…“விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்துவோர் விழாவில் ஆடினால் பாதி பணமாகவும் மீதியை விருதாகவும் தருவோம் என்கிறார்கள். பணம் கொடுத்து வாங்கும் விருது தேவை இல்லை என்பதால் விருது வேண்டாம் என்று அவர்களிடம் சொல்லி விடுகிறேன். எனக்கு விருது முக்கியமல்ல என் ரசிகர்கள் தொடர்ந்து அளித்து வரும் அன்பும் ஆதரவு போதும்” என்றார்.
‘2.ஓ’ படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.