ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புதிய ஐபோன் மாடலின் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஐபோன் 15 மாடலில் பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை ஆப்பிள் இதவரை தனது சாதனங்கள் எதிலும் வழங்கியது இல்லை. எனினும், ஆப்பிளுக்கு போட்டியாளராக விளங்கி வரும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் தங்களிது ஸ்மார்ட்போன் மாடல்களில் ஏற்கனவே இதுபோன்ற அம்சத்தை வழங்கி இருக்கின்றன.
எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள ஆப்பிள் நிறுவனம் தென் கொரிய நிறுவனம் ஒன்றை தனது வினியகஸ்தராக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்க இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐபோன் 15 மாடல்களில் இந்த பெரிஸ்கோபிக் டெலிபோட்டோ லென்ஸ்கள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் ஜாஹ்வா எலெக்டிரானிக்ஸ் எனும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆப்பிள் மற்றும் ஜாஹ்வா எலெக்டிரானிக்ஸ் நிறுவனங்கள் இடையேயான ஒப்பந்தத்தின் படி ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களுக்கு தேவையான பெரிஸ்கோபிக் டெலிபோட்டோ லென்ஸ்களை ஜாஹ்வா எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்க இருக்கிறது.
தென் கொரியாவை சேர்ந்த லென்ஸ் உற்பத்தியாளர்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,188.9 கோடி முதலீட்டில் புது உற்பத்தி ஆலையை தென் கொரியாவின் குமி பகுதியில் கட்டமைக்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றனர். இதே நிறுவனம் சாம்சங் நிறுவனத்திற்கு கேலக்ஸி எஸ்22 சீரிஸ் மாடல்களுக்கான OIS ஆக்டுயேட்டர்களை உற்பத்தி செய்து வழங்கி வருகின்றன.
தற்போது புது ஆலை கட்டமைக்க இருப்பதை அடுத்து ஜாஹ்வா நிறுவனம் பெரும் முதலீடுகளை ஈட்டி இருக்கலாம் என்பதை உணர்த்துகிறது. புது ஆலையில் உற்பத்தி பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் வாத வாக்கில் துவங்க இருக்கிறது.