75 ஆண்டுகளாக தனிமைப்படுத்தப்பட்ட க்ரூய்நார்ட் தீவு, காலடி எடுத்து வைக்கவே அஞ்சும் மக்கள். நடந்தது என்ன? உலகின் பல இடங்கள் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பது நாம் அறிவோம். ஆனால், எந்த தடையும் இல்லாத போதிலும் கூட மக்கள் செல்ல அஞ்சும் இடங்களும் பல இருக்கின்றன. இதில் பெரும்பாலான இடங்களுக்கு மக்கள் பேய் பயம் காட்டியும், இயற்கை சீற்றங்கள் பயத்தினாலும் தான் செல்லாமல் இருக்கின்றனர். இதில் க்ரூய்நார்ட் தீவு எந்த வகை? எதனால் மக்கள் கடந்த 75 வருடங்களாக அங்கு செல்லாமல் இருக்கிறார்கள் என இனி காணலாம்… பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
க்ரூய்நார்ட் தீவு!
க்ரூய்நார்ட் தீவுக்கு செல்ல மக்கள் யாருக்கும் தைரியம் இல்லை என்பது தான் உண்மை. க்ரூய்நார்ட் தீவு ஓவல் வடிவத்தில் அமைந்திருக்கும் தீவாகும். இது ஒரு ஸ்காட்டிஷ் தீவு.
வடக்கு ஸ்காட்லாந்து!
வடக்கு ஸ்காட்லாந்தில் இருந்து 0.6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது க்ரூய்நார்ட் தீவு. இரண்டாம் உலக போரின் போது இந்த இடம் பிரிட்டிஷ் இராணுவ ஆராய்ச்சியாளர்கள் இரசாயன ஆயுதங்கள் பரிசோதனை செய்த வந்த இடமாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஆந்த்ராக்ஸ்!
இங்கு பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் ஆந்த்ராக்ஸ்-ஐ ஆயுதமாக பயன்படுத்தி எதிரிகள் மீது தாக்குதல் நடத்த பரிசோதனை செய்ததாகவும் சில செய்திகள் கூறுகின்றன.
1942!
1942-ல் ‘Vollum 14578’ என்ற வீரியம் மிக்க ஆந்த்ராக்ஸ்-ஐ பரிசோதனை செய்தனர். இந்த குண்டில் அபாயமான பாக்டீரியாக்கள் நிறைந்திருந்தது. இதன் காரணத்தால் க்ரூய்நார்ட் தீவு இரசாயன போர் பரிசோதனை இடமாக மாறியது.
பதிவுகள்!
ஆடுகளை இங்கு கொண்டுவந்து அவர்கள் பல பரிசோதனைகள் செய்து வைத்துள்ளனர். இதை 16 MM காணொளிப்பதிவாக எடுத்து வைத்துள்ளனர். இவர்களது பரிசோதனைகளால் அந்த தீவே பாழாய்ப் போனது.
வாழ தகுயற்று போன தீவு!
ஆந்த்ராக்ஸ்-ன் தாக்கம் இந்த தீவில் அதிகரித்து போகவே. இங்கு வாழ முடியாது என கூறி இதை கைவிடப்பட்ட தீவாக அறிவித்தனர். 1945-ல் உலக போர் முடிவடைந்தது. இதன் உரிமையாளர் இந்த தீவை மீண்டும் வாங்க முயற்சித்தார். ஆனால், அரசு அதை நிராகரித்து உத்தரவிட்டது. மீண்டும் பாதுகாப்பான பிறகு உத்தரவிடப்படும் என மட்டும் அரசு கூறியது.
நீண்ட நாள் கழித்து!
பல ஆய்வுகள் மற்றும் சுத்தப்படுத்தல் முயற்சிக்கு பிறகு 1990-ல் க்ரூய்நார்ட் தீவு மக்கள் வாழ தகுதியான இடம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், டாக்டர் பிரைன் என்பவர் க்ரூய்நார்ட் தீவில் முழுவதுமாக ஆந்த்ராக்ஸ் நீக்கப்படவில்லை. அங்கு வாழ்வது அபாயமானது என கருத்து தெரிவித்தார். பரிசோதனைகள் முடிந்து ஏறத்தாழ 75 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால், இன்றும் க்ரூய்நார்ட் தீவு ஒரு அச்சுறுத்தலான இடமாகவே திகழ்ந்து வருகிறது.