ஆட்சி மாற்றம் தேவையில்லை அதனால் தமிழ் மக்களுக்கு எதுவும் நடக்கப் போவதில்லை என கூறியவர்கள் இன்று ஆட்சி மாற்றம்தான் வேண்டும் என கூறுவது சந்தர்ப்பவாத நடவடிக்கை என சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
மனித உரிமை பேரவையில் தமிழர்கள் பிரச்சினை குறித்து பேசியபோது ஆட்சி மாற்றத்திற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவதாக இலங்கை தமிழ் காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் எம்.பி. ஆகியோர் கையெழுத்திட்டமையானது அவர்களும் ஆட்சி மாற்றத்தை கோரி நிற்கின்றார்களோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
அத்தோடு நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றாலும் கூட அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக இதுவரை எவ்வித கருத்தையும் அவர்கள் வெளியிடவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆட்சி மாற்றத்தால் தமிழர்களுக்கு எதுவும் நடந்துவிடாது என கூறியவர்கள் இன்று ஆட்சி மாற்றம்தான் வேண்டும் என கூறும் நிலையில் இதனால் தமிழ் மக்களுக்கு என்ன நம்மை என்பதை கூற மறுத்துவிட்டனர் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.