Loading...
சரும அழகை மேம்படுத்துவதற்கு வைட்டமின் இ அவசியமானதாக இருக்கிறது. அதனை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி பார்ப்போம்.
Loading...
உடலின் சீரான இயக்கத்திற்கு வைட்டமின்களின் பங்களிப்பு முக்கியமானது. உடல் உள் உறுப்புகள் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் வைட்டமின்கள் உறுதுணையாக இருக்கின்றன. சரும அழகை மேம்படுத்துவதற்கு வைட்டமின் இ அவசியமானதாக இருக்கிறது. வைட்டமின் இ மாத்திரைகளை பயன்படுத்தி சருமத்தை மெருகேற்றலாம். அதனை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி பார்ப்போம்.
- சூரிய வெப்பத்தாக்கத்தை பிரதிபலிக்கும் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து சருமத்தை காப்பதற்கு வைட்டமின் இ உதவுகிறது. சரும சுருக்கத்திற்கும் நிவாரணம் அளிக்கிறது. இரண்டு வைட்டமின் இ மாத்திரைகளுடன் சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்த்து இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சருமத்தில் தடவிக்கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
- பிரசவத்தின்போது வயிற்றில் உருவாகும் கோடுகளை வைட்டமின் இ மாத்திரையால் போக்கலாம். ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை எடுத்து லேசாக சூடுபடுத்தி அதனுடன் வைட்டமின் இ மாத்திரையை சேர்த்து குழப்பி தழும்புகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்துவிட வேண்டும். 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தினமும் இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் தழும்புகள் மறைய தொடங்கும்.
- சிறிதளவு எலுமிச்சை சாறுடன் ஐந்து வைட்டமின் இ மாத்திரைகளை சேர்த்து குழைத்தும் தழும்புகளில் தடவி மசாஜ் செய்யலாம். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெ துப்பான நீரில் கழுவ வேண்டும்.
- வெது வெதுப்பான நீரில் 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிதளவு தேன் மற்றும் வைட்டமின் இ மாத்திரையை கலந்துகொள்ள வேண்டும். அந்த நீரில் கை, கால்களை 15 நிமிடம் முக்கி வைக்க வேண்டும். பின்னர் விரும்பிய மாய்ச்சரைசரை தடவிக்கொள்ளலாம். தினமும் அவ்வாறு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Loading...